கரூரில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கரூரில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வளர்ச்சித்துறை அலுவலர்களின் நீண்ட கால நிலுவை கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் இன்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் மகேந்திரன் நிர்வாகிகள் வினோத்குமார், திருமூர்த்தி, ஸ்ரீரங்கன்,சுரேஷ், வசந்தகுமார், மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன் மாநில இணை செயலாளர் வீர கடம்பகோபு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு, வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். உதவி செயற்பொறியாளர் நிலை பதவி உயர்வினை மேலும் காலதாமதம் இன்றி வழங்கிட வேண்டும். வளர்ச்சித் துறை ஊழியர் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை முற்றாக கைவிட வேண்டும். கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்தல் மற்றும் இதற்கான ஆணையம் அமைத்தல் வேண்டும். பணியிடை இறந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களை பாதுகாத்திட கருணை அடிப்படை பணி நியமங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு நிரந்தர ஊழியர் கூட்டமைப்பு வசதிகளை மாநில மாவட்ட வட்டார அளவில் ஏற்படுத்த வேண்டும். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணிகளுடன் ஊர்நல அலுவலர் பணிகளை ஒருங்கிணைத்தல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அலுவலக கட்டிடம் உருவாக்குதல் உள்ளிட்ட 21 வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் கரூர் - திண்டுக்கல் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.
Next Story





