தேமுதிக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு தேமுதிக கரூர் மாவட்ட கழகம் மற்றும் குளித்தலை நகர கழகம் சார்பில் கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன், கரூர் மாநகர் மாவட்ட செயலாளர் அரவை முத்து தலைமையில் தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. குளித்தலை நகரக் கழக செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். முன்னதாக கோரிக்கைகள் அடங்கிய மனுவினை குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக-வை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Next Story