தாராபுரம் திமுக சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.எம். ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் திமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.எம். ரவியை கண்டித்து 800 க்கும் மேற்பட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழகத்தின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழக மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் அண்ணா சாலை முன்பு ஆளுநர் ஆர் எம் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் ஒன்றிய அரசை கண்டித்தும் ஆளுநர் ஆரம் ரவியை கண்டித்தும் அதிமுகவையும் கண்டித்தும் திமுகவினர் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெளியேறு வெளியேறு ஆளுநர் ஆரம் ரவியே வெளியேறு. வேஸ்ட் வேஸ்ட் ஆளுநர் பதவி வேஸ்ட்டு பெஸ்ட்டு பெஸ்ட்டு திராவிட மாடல் ஆட்சி தான் பெஸ்ட்டு  காட்டிக் கொடுக்காதே காட்டி கொடுக்காதே அதிமுகவே காட்டிக் கொடுக்காதே பதவி விலகு பதவி விலகு ஆளுநர் பதவி விலகு வெளியேறு வெளியேறு தமிழனின் எதிரியை வெளியேறு உள்ளிட்ட கோஷங்களை தொண்டர்கள் பலத்த கோஷத்துடன் சத்தமிட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட அவைத் தலைவருமான ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகர்,வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் நகரச் செயலாளர் முருகானந்தம், நகரத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் தமிழரசு, நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன், ஒன்றிய செயலாளர் எஸ் வி செந்தில் குமார்.உள்ளிட்ட நகர ஒன்றிய பேரூர் வார்டு கழக நிர்வாகிகள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story