பட்டாக்கத்தியுடன் வந்த இருவரிடம் விசாரணை

பட்டாக்கத்தியுடன் வந்த இருவரிடம் விசாரணை
பட்டாக்கத்தியுடன் வந்த இருவரிடம் விசாரணை
திருவொற்றியூர் மணலி நெடுஞ்சாலையில், சாத்தாங்காடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக பைக்கில் வந்த எண்ணூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த பரத் (20), சரவணன் (21) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் ஒரு பட்டாக்கத்தி இருந்தது. இதுபற்றி விசாரித்தபோது, வரும் வழியில் பட்டாக்கத்தி கிடந்தது. அதை போலீசாரிடம் ஒப்படைக்க கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களின் விவரங்களை பதிவு செய்து பெற்றோரை அழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர். பட்டாக்கத்தி உண்மையில் கீழே கிடந்ததா, அதை யார் கொண்டு வந்து போட்டது என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்துகின்றனர்.
Next Story