சோலார் மின் கம்பத்தில் பேட்டரி, திருடிய வாலிபர் கைது
Dindigul King 24x7 |7 Jan 2025 11:32 AM GMT
நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் கம்பத்தில் பேட்டரி, திருடிய வாலிபர் கைது - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
மதுரை - துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலைகளின் மையப்பகுதியில் சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி கும்பச்சாலை என்ற இடத்தில் சாலை நடுவில் சோலார் மின் கம்பம் பொருத்தப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரியை இளைஞர் ஒருவர் சர்வ சாதாரணமாக மின்கம்பத்தில் ஏறி நீண்ட நேரம் பொறுமையாக இருந்து பேட்டரியை கழற்றி பின் கீழ் இறங்கினார். அந்த இளைஞர் பேட்டரியை கழட்டுவதை அப்பகுதியாக கடந்து சென்ற வாகன ஓட்டிகளும் நடந்து சென்ற பாதசாதிகளும் கண்டு கொள்ளாமல் சென்றனர். பேட்டரி திருடு போனது குறித்து மதுரை துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பாளர் பகவதி ராஜா நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட குட்டுப்பட்டி அருகே உள்ள பஞ்சயம்பட்டியை சேர்ந்த தங்கவேல் என்பவரை நத்தம் போலீசார் கைது செய்தனர். வாகனங்களும் பொதுமக்களும் அதிக அளவில் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சோலார் மின்கம்பத்திலிருந்து பேட்டரி திருடு போன சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story