ஆந்திராவில் தேசிய அளவிலான ரோல்பால் போட்டி
Dindigul King 24x7 |7 Jan 2025 11:38 AM GMT
ஆந்திராவில் தேசிய அளவிலான ரோல் போட்டி, தமிழக அணியில் இடம் பெற்ற திண்டுக்கல் மாணவர்கள்
தேசிய அளவிலான 17 வயதுக்குட்ப்படோருக்கான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி ஆந்திர மாநிலம் கர்நுல் மாவட்டத்தில் வருகிற ஜனவரி 8 முதல் 11 ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழக அணி சார்பில் 12 ஆண்களும், 12 பெண்களும் கலந்து கொள்கின்றனர். இதில் ஆண்கள் பிரிவில் ஜெயசூர்யா (வயது16) தேஜஸ் (வயது 16) பெண்கள் பிரிவில் மது (வயது 15), சஹானா (வயது 16) ஆகிய 4 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற திண்டுக்கல் மாணவர்கள். இந்த 4 மணவர்களுக்கு மாநில அளவில் நடைபெற்ற ரோல்பால் ஸ்கேட்டிங்கில் தமிழக அணிக்காக விளையாடி மூன்றாம் பரிசை வென்று கொடுத்துள்ளனர் .தமிழக அணிக்காக இந்த நான்கு மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு தற்போது தமிழக அணிக்காக விளையாட உள்ளனர் இந்நிலையில் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் வழியனுப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சர்வதேச நடுவரும், பயிற்சியாளருமான எம்.பிரேம்நாத், பயிற்சியாளர் தங்கலட்சுமி, தீபக், பிரதீப் மற்றும் நவீன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
Next Story