சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டம்

சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டம்
X
சிவகங்கை மாவட்டம், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சமூகத்தினர்கள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
சிவகங்கை மாவட்டம், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM - ARISE) திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சமூகத்தினர்கள் http://newscheme.tahdco.com என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM - ARISE) திட்டத்தின் கீழ் திட்ட மதிப்புத் தொகையில் 35% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தில் தவனைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு, மேலும் 6% சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். தொழில் முனைவோர்களாக விருப்பமுள்ள புதிரை வண்ணார் சமூகத்தினர் மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற தாட்கோ இணையதள முகவரியில் (http://newscheme.tahdco.com) விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட மேலாளர், தாட்கோ அவர்களை அணுகி விவரம் பெற்று, உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story