வைகுண்ட ஏகாதசி லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

வைகுண்ட ஏகாதசி லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்
X
வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு லட்டு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ராஜவீதி காவிரி கரையோரம் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் .வரும் வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ள நிலையில் நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். இதன் ஒரு பகுதியாக பக்தர்களுக்கு வழங்குவதற்காக லட்டு தயாரிக்கும் பணி கோவில் மண்டபத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த லட்டு தயாரிப்புக்கு மூலப் பொருட்களாக கடலை மாவு 180 கிலோ, சர்க்கரை 100 கிலோ, முந்திரி 20 கிலோ, திராட்சை 20 கிலோ, கிராம்பு 15 கிலோ, நெய் 50 லிட்டர், ஏலக்காய் 15 கிலோ உள்ளிட்ட மூலப் பொருட்களைக் கொண்டு 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக லட்டு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
Next Story