சாலை பாதுகாப்பு விதிகள் ஆட்டோ பேரணி

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் பங்கேற்ற ஆட்டோக்களில் சாலை விதிகள் குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டியும், சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பேரணியை துவக்கி வைத்தார் ஆட்டோபேரணி திருப்பத்தூர் சாலை, பழைய நீதிமன்றம், காந்தி வீதி, மரக்கடை வீதி, பேருந்து நிலையம், மஜீத் ரோடு வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முடிவுற்றது. அங்கு ஆட்டோ ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் பெறவதற்காக வருகை தந்த பொதுமக்கள் ஆகியோருக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி சுப்பையா, சார்பு நீதிபதி பாண்டி, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜானகிராமன், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் வழக்கறிஞர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story

