காருடையாம்பாளையம்- கட்டிய மனைவி மாயம் .கணவன் காவல் நிலையத்தில் புகார்.
Karur King 24x7 |7 Jan 2025 2:57 PM GMT
காருடையாம்பாளையம்- கட்டிய மனைவி மாயம் .கணவன் காவல் நிலையத்தில் புகார்.
காருடையாம்பாளையம்- கட்டிய மனைவி மாயம் .கணவன் காவல் நிலையத்தில் புகார். கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் வயது 38. இவரது மனைவி ஜெயசூர்யா 36. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயசூர்யா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் தனது மனைவியை தேடி உள்ளார். அப்போது ஜெயசூர்யா வழக்கமாக செல்லும் இடங்களிலும், உறவினர்கள் வீட்டிலும் தேடிப் பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், தனது மனைவியை காணவில்லை என க. பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story