இருசக்கர வாகனம் - கார் மோதி வாலிபர் காயம்
Nagercoil King 24x7 |7 Jan 2025 3:23 PM GMT
குமரி
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம், தோப்பு பகுதியை சேர்ந்தவர் அகமது கோயா தங்கள் (39) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது சொகுசு காரில் நம்பாளி வடக்கு விளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நித்திரவிளையை சேர்ந்த லெனின் (19) என்பவர் வந்த பைக் சொகுசு காரில் மோதியுள்ளது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கி உள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த லெனின் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக அகமது கோயா தங்கள் கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story