ஆளுநரை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…!
Tiruchirappalli King 24x7 |8 Jan 2025 1:36 AM GMT
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் சென்றது மற்றும் தமிழ்நாட்டை தொடர்ந்து அவமரியாதை செய்து வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்தவகையில் திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கிழக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மண்டலக்குழு தலைவருமான மு.மதிவாணன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் அவைத் தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் குணசேகரன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, பகுதி செயலாளர்கள் ராஜ்முகமது, மோகன், பாபு, ஏ.எம்.ஜி.விஜயகுமார், மணிவேல், கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், நீலமேகம், சிவக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் கே.கே.கே.கார்த்திக், வேங்கூர் தனசேகரன், கலை இலக்கிய பேரவை மாநகர அமைப்பாளர் செந்தில்குமார், வட்டச் செயலாளர்கள் சுருளிராஜன், சுரேஷ், சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story