ராமநாதபுரம் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

ராமநாதபுரம் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
X
முதுகுளத்தூர் அருகே ஊராட்சி தலைவரின் பணிக்காலம் முடிவடைந்ததையடுத்து, ஊராட்சியில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி தலைவரின் 5 ஆண்டு பணிக்காலம் ஜன.5 ஆம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து ஊராட்சி தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி, சிறப்பாக தூய்மைப் பணிகளை மேற்கொண்ட பணியாளர்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்து, உணவு விருந்து வழங்கி நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் கலைச்செல்வி ராஜசேகர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாணுமதி முருகவேல், அலுவலக பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் மலைக்கண்ணன், சாந்தி, கிறிஸ்டினா, கிருஷ்ணன், சோனியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story