காங்கேயத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

X
வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் குறித்து விழிப்புணர்வு நேற்று காங்கேயம் பகுதியில் நடைபெற்றது. இது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் காங்கேயம் வட்டாரப் போக்குவரத்து துறை காங்கேயம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள், பஸ் நிலையம், சென்னிமலை சாலை,திருப்பூர் சாலை ஆகிய பகுதிகளில் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் சீட் பெல்ட் அணிவது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், வேகவரம்பினை பின்பற்றுவது, வாகனங்களையும் அதன் ஆவணங்களையும் சரியான முறையில் பராமரிப்பது, கைபேசி பயன்படுத்தக்கூடாது, தலைக்கவசம் அணிய வேண்டும், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது உட்பட சாலை வீதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

