ராமநாதபுரம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு எழுத்துப் பயிற்சி முகாம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அரிராமர் தலைமையில், மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதிநிலை விரிவுரையாளர் ரமணி, கமுதி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம், வட்டார கல்வி அலுவலர்கள் சண்முகம், பாண்டீஸ்வரி, காசி ஆகியோரது முன்னிலையில் கமுதி வட்டத்தில் பணியாற்றும், 1 முதல் 3 ஆம் வகுப்பு எடுக்கும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்றாம் கட்ட எண்ணும் எழுத்து பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இவர்களுக்கு 12 ஆசிரியர் கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனார். முன்னதாக ராமசாமிபட்டி பள்ளியின் முதுநிலை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதில் 180 ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Next Story

