தொழில் முனைவு திட்டத்தில் சேர கலெக்டர் அழைப்பு
Kanchipuram King 24x7 |8 Jan 2025 5:07 AM GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவு திட்டத்தில் சேர மாவட்ட நிர்வாகம் அழைப்பு தெரிவித்துள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ், திட்ட மதிப்பு தொகையில் 35 சதவீதம் அல்லது 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.இவை, மானியத்துடன் கூடிய வங்கி கடனுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணை தொகை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு, கூடுதலாக 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். புதிரை வண்ணார் சமூகத்தினர் இந்த திட்டத்தின் கீழ், தாட்கோ இணையதள முகவரியில் https://newscheme.tahdco.com விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
Next Story