டிராக்டர் பறிமுதல்

டிராக்டர் பறிமுதல்
அந்தியூர் அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல்
அந்தியூர் அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக அந்தியூர் நில வருவாய் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கோவிலூர் - எண்ணமங்கலம் ரோட்டில் கும்மி காடு என்றும் இடத்தில் அந்தியூர் நில வருவாய் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக ஒரு டிராக்டர் வந்தது. அந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சட்ட விரோதமாக ஒரு யூனிட் மணல் அள்ளி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இது குறித்து டிராக்டர் ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் அந்தியூர் அடுத்த சங்கரா பாளையம், வட்டக்காடு பகுதியைச் சேர்ந்த மணி (44) என தெரிய வந்தது. கோவிலூர் அருகே புங்கமடுவு பள்ளம் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக மணலை அள்ளி கொண்டு வட்டக்காடு பகுதிக்கு வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து அந்த டிராக்டர் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story