பொன்னேரி அருகே கோவில் உண்டியல் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
Tiruvallur King 24x7 |8 Jan 2025 6:15 AM GMT
பொன்னேரி அருகே ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை
பொன்னேரி அருகே ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை.. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது இக்கோவிலில் கேட் பூட்டு மற்றும் உண்டியலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளை குறித்து பொன்னேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற இக்கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் உண்டியல் பணம் கொள்ளை போன சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story