சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
Nagapattinam King 24x7 |8 Jan 2025 6:25 AM GMT
பெருநடை பேரணி
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்ற துறை, மாநில அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை ஆகியவற்றின் சார்பில், சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின்கீழ், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, விழிப்புணர்வு பெருநடை பயணம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வி.தமிழ் ஒளி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் சி.விஜயகுமார் துண்டு பிரசுரங்களை வழங்கினார். பெருநடை பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, நாகூர் வரை நடைபெற்றது. தேசிய பசுமை படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கும், கடை உரிமையாளர்களுக்கும், பயணிகளுக்கும் வழங்கப்பட்டன. மேலும் பெருநடை பயணத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில், புகையில்லா போகி விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. பெருநடை பயணத்தில் கலந்து கொண்டவர்கள், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய படி சென்றனர். நிகழ்ச்சியில், நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மைய ஒருங்கிணைப்பாளர் எஸ்.செங்குட்டுவன், பசுமை ஒருங்கிணைப்பாளர் டிவைனியா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு திட்ட ஏற்பாட்டாளர் ஆன்லி அன்ன குரியன், தொழிற்பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்.வெங்கடேசன், எஸ் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் ஜிப்சன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல், கல்வி மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மா.முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தார்.
Next Story