விளைந்த நெற்பயிரில் அரிசி இன்றி பதர் மட்டுமே மிஞ்சியதால் விவசாயிகள் வேதனை
Tiruvallur King 24x7 |8 Jan 2025 6:39 AM GMT
குலை நோய் தண்டுப்புழு தாக்குதலால் 200 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நாசம், 20 நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் விளைந்த நெற்பயிரில் அரிசி இன்றி பதர் மட்டுமே மிஞ்சியதால் விவசாயிகள் வேதனை
திருவள்ளூர் அருகே குலை நோய் தண்டுப்புழு தாக்குதலால் 200 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நாசம், 20 நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் விளைந்த நெற்பயிரில் அரிசி இன்றி பதர் மட்டுமே மிஞ்சியதால் விவசாயிகள் வேதனை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள சிறுலபாக்கம் ஊராட்சியில் உள்ள விவசாயிகள் வடகிழக்கு பருவமழை தங்களுக்கு கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்போடு, சம்பா சாகுபடிக்காக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பாபட்லா (BBT ) பொன்னி நெற்பயிர்கள் பயிரிட்டு இருந்தனர், நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்த நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்து புயல் கரையை கடந்த பின்னர், பனிப்பொழிவு தொடங்கியபோது மீண்டும் சில தினங்கள் கழித்து பனிப்பொழிவுடன் கனமழையும் பெய்ததால் மழைநீர் நிலங்களில் சூழ்ந்து நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின, தொடர்ந்து மெல்ல மெல்ல தண்ணீர் வடிந்த நிலையில் விளைந்த நெற்பயிர்கள் இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய தயாராக இருந்த விவசாயிகள் இந்த ஆண்டு தைப்பொங்கலை மகிழ்ச்சியோடு வரவேற்க காத்திருந்த அவர்களுக்கு பேரிடியாக குலை நோய் தாக்கியதால் விளைந்த நெல் கதிரில் அரிசி இன்றி வெறும் பதர் மட்டுமே மிஞ்சியது, மற்றொருபுறம் தண்டு தண்டுப்புழு தாக்குதலால் சரிந்து சாய்ந்த நெற்பயிர்கள் அழுகி நாசமானது, இதனால் பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்த அப்பகுதி விவசாயிகள் மனைவி மக்களின் நகைகளை அடகு வைக்கும், கடன் வாங்கியும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நெற்பயிர்கள் கண்முன்னே கருகியதை கண்டு கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகள் இது குறித்து இரண்டு வாரத்திற்கு முன்பே வேளான் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் அதிகாரிகள் நேரடியாக வந்து பாதிப்பு குறித்து ஆய்வு செய்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதின் விளைவு இத்தகைய துயரத்திற்கு தாங்கள் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story