கரூரில்,ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Karur King 24x7 |8 Jan 2025 7:07 AM GMT
கரூரில்,ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூரில்,ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கரூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை வனத்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் அமைப்பினரும் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே உள்ள இராசாண்டார் திருமலை பகுதியில் மட்டும் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அண்மை காலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள், போட்டியை காண வரும் பொதுமக்கள் அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
Next Story