மாற்றுக் கட்சியிலிருந்து விலகி

மாற்றுக் கட்சியிலிருந்து விலகி
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட வலிவலம் கடைவீதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாற்றுக் கட்சியிலிருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி, நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. முன்னதாக, கொடியாலத்தூர் கிராமத்தில், கட்சி கொடியை கட்சியின் துணை பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் ஏற்றி வைத்தார். பின்னர், அவரது முன்னிலையில் கொடியாலத்தூர், வலிவலம், ஆதமங்கலம், மயிலாப்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு கட்சியிலிருந்து விலகி 60-க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், நாகை பாராளுமன்ற தொகுதி செயலாளர் என்.டி.இடிமுரசு, நாகை தெற்கு மாவட்ட செயலாளர் சும.செல்வராசு, திருவாரூர் மைய மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் வி.த.செல்வம், வடிவழகன், மாவட்ட துணை செயலாளர் அரா.பேரறிவாளன், வழக்கறிஞரும் கவிஞருமான தை.கந்தசாமி, கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ், ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், பாவேந்தன், ஒருங்கிணைப்பாளர்கள் அருள்ராமன், மணிமாறன், முகாம் பொறுப்பாளர்கள் வெங்கடேஷன், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story