இஸ்ரோ புதிய தலைவருக்கு குமரி எம்.பி வாழ்த்து
Nagercoil King 24x7 |8 Jan 2025 7:30 AM GMT
கன்னியாகுமரி
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த வி நாராயணன் - க்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:- உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான இஸ்ரோ இந்திய நாட்டை பெருமைப்படுத்தும் விதத்தில் பல்வேறு சாதனைகள் செய்து வருகிறது. இந்தியா விண்வெளியில் காலடி எடுத்து வைப்பதற்கு காரணமான இந்த ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர் அப்துல் கலாம் போன்ற பல விஞ்ஞான தலைவர்களை நாட்டுக்கு தந்துள்ளது. உலகமே உற்று நோக்கும் நமது விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக நமது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வி நாராயணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் செய்தி. அவரது திறமையும் அனுபவமும் நமது விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சாதனைகளின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் திட்டங்களில் 40 வருட கால அனுபவத்தைக் கொண்டிருக்கும் நாராயணன் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். என கூறியுள்ளார்.
Next Story