மீன்சுருட்டி அருகே குண்டவெளியில் மீன்சுருட்டி டு கல்லாத்தூர் சாலை கேட்டு கலர் துண்டுகளை அணிந்து வந்து வித்தியாசப்படுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

X
அரியலூர், ஜன.8 ஜெயங்கொண்டம் அருகே 5 ஊர் கிராம மக்கள் சாலை வசதி கேட்டு மறியல் போராட்டத்திற்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன்சுருட்டியில் பகுதி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன் சுருட்டியில் இருந்து கல்லாதூர் வரை புதிய தார் சாலை வசதி கேட்டு நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சாலை வசதி கேட்டு இருசக்கர வாகன பேரணி, உண்ணாவிரத போராட்டம், கிராமங்களில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம், ஆர்ப்பாட்டம், துண்டு பிரசுரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அந்தப் பகுதியில் புதிய தார் சாலை அமைப்பதற்கு தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த பொதுமக்கள் மீன்சுருட்டி கடைவீதியில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டனர். திட்டமிட்டபடி மீன்சுருட்டி, வெத்தியார்வெட்டு, ஆலத்திபள்ளம், சத்திரம் உள்ளிட்ட 5 ஊர் கிராம மக்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீன்சுருட்டிக்கு போராட்டம் நடத்துவதற்கு ஆங்காங்கே திரண்டு வந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் குண்டவெளி செல்லியம்மன் கோவிலில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில், தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் நேரில் வருகை தந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் வரை பொதுமக்கள் அங்கேயே இருந்து சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடருவோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மீன்சுருட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளதால் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் ஊரை அடையாளப்படுத்தும் விதமாக குண்டவெளி மக்கள் ப்ளூ நிற துண்டும் ஆலத்திப்பள்ளம் மக்கள் பச்சை நிற துண்டும், சலுப்பை மக்கள் வெள்ளை நிற துண்டும், சத்திரம் கிராம மக்கள் மஞ்சள் நிற துண்டும், வெட்டியார்வெட்டு கிராம மக்கள் சிவப்பு துண்டு என அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்தப் போராட்டம் காரணமாக செய்தி அறிந்து வெளியூர்களில் இருந்து ஏராளமான பெண்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் இன்னும் பல ஊர்களில் இருந்து பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். (
Next Story

