பராமரிப்பு பணிகள் காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
Chengalpattu King 24x7 |8 Jan 2025 10:18 AM GMT
பராமரிப்பு பணிகள் காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
மதுராந்தகம் அருகே சாலை பராமரிப்பு பணி காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி முதல் பரனூர் சுங்கச்சாவடி வரை சாலை பராமரிக்க பணி நடைபெற்று வருகிறது.இந்த சாலை பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி என்ற இடத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மர்மமாக செல்லக்கூடிய வாகனங்களும் திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்களும் அணிவகுத்து நிற்கிறது இந்த போக்குவரத்து நெரிசலைசரி செய்ய போதிய காவலர்கள் இல்லாததால்வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
Next Story