உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களை கண்டித்து வெளியூர் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
Chengalpattu King 24x7 |8 Jan 2025 10:20 AM GMT
உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களை கண்டித்து வெளியூர் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
திருக்கழுக்குன்றம் தாலுகா தலைமையிடமாக உள்ளதால், சுற்றுப்புற பகுதியினர் ஏராளமானோர், தினமும் இங்கு வந்து செல்கின்றனர். போதிய பேருந்து வசதி இல்லாததால், பெரும்பாலானோர் ஷேர் ஆட்டோக்களின் வந்து செல்கின்றனர். இப்பகுதிக்கு நெரும்பூர், மாமல்லபுரம், வெங்கப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பலர், ஷேர் ஆட்டோக்கள் இயக்குகின்றனர். திருக்கழுக்குன்றத்தில் பேருந்து நிலையம், மார்க்கெட் ஆகிய பகுதிகளிலிருந்து ஆட்டோக்கள் புறப்படுகின்றன.முதலில் வந்த ஷேர் ஆட்டோ, அடுத்தடுத்து வந்த ஷேர் ஆட்டோ என, வரிசையில் நின்று அடுத்தடுத்து புறப்படும். இந்நிலையில், உள்ளூரைச் ஓட்டுனர்கள், தாங்கள் எந்த நேரத்தில் வந்தாலும், வரிசையில் நிற்காமல் புறப்படுவோம் என்றும், தங்களுக்கு பிறகு தான், வெளியூர் ஷேர் ஆட்டோக்கள் செல்ல வேண்டும் என்றும், சில மாதங்களாக அடாவடி செய்வதாக கூறப்படுகிறது. இதனால், வெளியூர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டு தாசில்தார், போலீசாரிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாததால், ஓட்டுனர்கள் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து, உள்ளூர் ஆட்டோக்காரர்களின் அடாவடி போக்கு, அரசு துறையினரின் மெத்தனத்தை கண்டித்து, வெளியூர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் நேற்று, திருக்கழுக்குன்றம் பேருந்து நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததும், அவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story