இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த தொலைபேசி திருட்டு
Chengalpattu King 24x7 |8 Jan 2025 10:26 AM GMT
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த தொலைபேசி திருட்டு
செங்கல்பட்டு அடுத்த மலையடி வேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன், 30; செங்கல்பட்டில் உள்ள தனியார் உணவகத்தில், மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் கேசவன், தன் மனைவியை சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 'டி.வி.எஸ்., ஜூப்பீட்டர்' ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். மருத்துவமனை அருகிலுள்ள கடைக்குச் சென்ற போது, தன் மொபைல் போனை ஸ்கூட்டரின் முன்பக்கம் வைத்து விட்டுச் சென்றார்.திரும்பி வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் இவரது மொபைல் போனை திருடிச் சென்றது தெரிந்தது. மேலும் இதே பகுதியில் நிறுத்தி வைக்கபட்டு இருந்த, 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்.,' ரக ஸ்கூட்டரும் திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story