ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ விசாரணையை திரும்ப பெற உயர் நீதிமன்றம் மறுப்பு
Chennai King 24x7 |8 Jan 2025 10:29 AM GMT
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்கும்படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நேற்று முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெறலாம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
Next Story