ராமநாதபுரம் கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது
Ramanathapuram King 24x7 |8 Jan 2025 10:42 AM GMT
தொண்டி அருகேகொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.
ராமநாதபுரத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. கடந்த 01.11.2024 ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நம்புதாளை கிராமத்தில் முத்துக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் சின்னப்பன் மகன் அஜித்குமார் தொண்டி காவல் நிலைய குற்ற எண் : 220/24 u/s 191 (3), 103 BNS @ 191 (3), 103, 296 (b), 109(1) BNS -ன் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மேலும் இவர் மீது பல்வேறு திருட்டு மற்றும் கொலை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில் மேற்படி நபர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ். அவர்கள் பரிந்துரையின் பேரில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்கள். இதன்படி தொண்டி காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் அஜித்குமாரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.
Next Story