ரெங்கநாதபுரம் டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. பெண் படுகாயம்.
Karur King 24x7 |8 Jan 2025 10:43 AM GMT
ரெங்கநாதபுரம் டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. பெண் படுகாயம்.
ரெங்கநாதபுரம் டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. பெண் படுகாயம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா வயது 32. இவரது மனைவி தீபிகா வயது 27. இவர்கள் இருவரும் ஜனவரி 7ஆம் தேதி காலை 10 மணி அளவில், திருச்சி - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். தீபிகா டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் ரெங்கநாதபுரம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, அதே சாலையில் அரியலூர் மாவட்டம், ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் வயது 58 என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து, இளையராஜா ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்ற தீபிகாவிற்கு இடது முன்புற தலை மற்றும் மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக இளையராஜா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அரசு பேருந்தை வேகமாகவும், கவன குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சாமிநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்
Next Story