ஆன்லைன் லாட்டரி சீட்டு நடத்திய வாலிபர் கைது.
Madurai King 24x7 |8 Jan 2025 10:48 AM GMT
மதுரையை சேர்ந்த வாலிபர் ஆன்லைன் லாட்டரி சீட்டு நடத்தி போலீசாரிடம் பிடிபட்டார்
மதுரை, சக்கிமங்கலத்தைச் சேர்ந்த தென்னரசு (22) என்பவன் கிணத்துக்கடவு பகுதியில் ஆன்லைன் லாட்டரி நடத்தி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளான். கேரள மாநில 3 மற்றும் 4 இலக்க எண்களை காண்பித்து லாட்டரி வாங்கினால் நிச்சயம் பரிசு வாங்கி தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து மக்களை வளைத்துள்ளான். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், தென்னரசை கைது செய்து, அவனிடம் இருந்த பிரிண்டர் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில், தென்னரசு மீது மதுரை மாவட்டம் கருப்பாயூரணி, பெருங்குடி, சிலைமான் ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே ஆன்லைன் லாட்டரி மோசடி வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story