குலசேகரம் : விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
Nagercoil King 24x7 |8 Jan 2025 11:35 AM GMT
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பள்ளிமுக்கு பகுதியை சேர்ந்தவர் சுதீர் மகன் அபிஜித் (20 ). நேற்று இரவு பைக்கில் பேச்சிப்பாறைக்கு சென்று விட்டு, சுமார் பத்து மணி அளவில் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. குலசேகரம் அருகே கோட்டூர் கோணம் என்ற பகுதியில் சென்றபோது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த டெம்போவன் பின்பக்கம் பைக் மோதியது. தூக்கி வீசப்பட்ட அபிஜித் படுகாயமடைந்தார். பைக் டெம்போ அடியில் சிக்கி நொறுங்கியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அபிஜித்தை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோத்த போது அபிஜித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story