குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

அதியமான் கோட்டை பகுதியில் குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட நிலையத்தை ஆட்சியர் சாந்தி தொடக்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட ‌அதியமான் கோட்டைஊராட்சி, காலபைரவர் திருக்கோயில் அருகாமையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக (RO) குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 10 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட நிலையில் இன்று ஜனவரி 08, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி IAS திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் திமுக நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் AS.சண்முகம் வட்டார அலுவலர், ஊராட்சி செயலாளர் P.பிரபு, M.அன்பரசு மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.
Next Story