ராசிபுரம் அடுத்த மதியம்பட்டி வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நீரால் பல்லாயிரம் கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் அவலம்...
Rasipuram King 24x7 |8 Jan 2025 2:26 PM GMT
ராசிபுரம் அடுத்த மதியம்பட்டி வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நீரால் பல்லாயிரம் கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் அவலம்...
சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவாரத்தில் இருந்து திருமணிமுத்தாறு தொடங்கி சேலம் நகர் பகுதி, ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, எலச்சிபாளையம், பரமத்தி வேலூர் வழியாக சென்று திருமணிமுத்தாறு இறுதியாக காவிரி ஆற்றில் கலைக்கிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதியம்பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. திருமணிமுத்தாறில் சாக்கடை மற்றும் சாயக்கழிவு நீர் கலப்பதால் ஆற்றில் கரும் நிறத்துடனும், நுரையுடனும் நீரானது செல்கிறது. திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதால் பல்லாயிரம் கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மீன்கள் செத்து மிதப்பதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும், மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த அப்பகுதியை சேர்ந்த விவசாயி கந்தசாமி கூறுகையில் கடந்த 4 நாட்களாக திருமணிமுற்றாற்றில் சாயக்கழிவு நீர் மற்றும் சேகோ பேக்ட்ரி கழிவுநீர் திறந்து விடுவதால் நுரையுடன் நீர் செல்வதாகவும், ஆற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்து இருப்பதால் துர்நாற்றம் வீசும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்ட நிலையில் தொடர்பு செல்லவில்லை எனவும்,இதனை கூடிய விரைவில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளர்..
Next Story