தரைப்பாலம் அமைக்க இடும்பன்குளத்தில் எம்.பி. நேரில் ஆய்வு.
Paramathi Velur King 24x7 |8 Jan 2025 2:55 PM GMT
தரைப்பாலம் அமைக்க இடும்பன்குளத்தில் எம்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டர்.
பரமத்திவேலூர்,ஜன.8: நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினரிடம் பொதுமக் கள் கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் தரைப்பா லம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் பாராளு மன்ற உறுப்பினர் மாதேஸ் வரன் அதனை ஏற்று நேரில் ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின் போது கொமதேக மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மணி, பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, நகர செய லாளர் ரமேஷ்பாபு,தி. மு.க. விளையாட்டு மேம் பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிர பாகரன், கொமதேக கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மணி, ஒன்றிய செய லாளர் தினேஷ்கண்ணன், பரமத்தி பேரூராட்சி நகர தலைவர் கணேசன், பொருளாளர் நந்தகுமார் மற்றும் வேலூர் செயலா ளர் சக்திவேல், நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலா ளர் சசிகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். தங்களுடைய கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்ட எம்.பி.க்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
Next Story