கிராம மக்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்.

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதி மக்களை சந்தித்து ஆதரவாக பிரேமலதா பேசினார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜன.8) இரவு பேசினார். தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அ.வல்லாளபட்டி மற்றும் அரிட்டாப்பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கிராம பொது மக்களுக்கு தேமுதிக ஆதரவாக இருக்கும் என்றும் பொது மக்களிடம் பேசினார். இந்நிகழ்வில் பொருளாளர் எல்.கே.சுதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதி, விஜயபிரபாகரன், மதுரை மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், கிராம பொதுமக்கள், தேமுதிக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story