வாலாஜாபாத் அரசு மருத்துவமனை புதிய கட்டட பணிகள் துவக்கம்
Kanchipuram King 24x7 |8 Jan 2025 3:21 PM GMT
வாலாஜாபாத்தில் 4. 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவமனை கட்டும் பணி துவக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டார அரசு மருத்துவமனைக்கு, தினமும் 500க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். 60 படுக்கை வசதி கொண்ட இம்மருத்துவமனையில், தினசரி 20 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.இந்த மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு போதுமான மருத்துவ வசதி இல்லை. இதன் காரணமாக, முதலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், காலவிரயம் ஏற்படுவதோடு, நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இவற்றை தடுக்க வாலாஜாபாதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு ஏற்படுத்த, 4.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 12ம் தேதி புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, தற்போது புதிய கட்டடத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
Next Story