பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து!
Vellore King 24x7 |8 Jan 2025 3:33 PM GMT
பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து தனியார் பேருந்து மூலம் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் செல்வதற்காக இன்று கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து புறப்பட்டு வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பேரணாம்பட்டு அடுத்த பத்தல பள்ளி மலைப்பகுதியில் பேருந்து சென்று கொண்டு இருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்தது. இதில் 20 க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story