போச்சம்பள்ளி பகுதிகளில் மாம் பூக்களில் பூச்சி தாக்குதல் விவசாயிகள் வேதனை.
Krishnagiri King 24x7 |9 Jan 2025 12:44 AM GMT
போச்சம்பள்ளி பகுதிகளில் மாம் பூக்களில் பூச்சி தாக்குதல் விவசாயிகள் வேதனை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 34 ஆயிரம் ஹெக்டேர் மேல் நிலப்பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாம் பூக்கள் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து பூக்கும் மற்றும் மார்ச் வரை நீடிக்கும். இருப்பினும், பூக்கள் தொடங்கும் நேரத்தைப் பொறுத்து ஜனவரி முதல் மே வரை பழ வளர்ச்சி தொடங்குகிறது. இங்கு விளையும் மாங்கனிகள் மிகவும் சுவையாகவும், தரமாகவும் உள்ளதால் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது மா மரங்களில் பூக்கள் பூத்து வரும் நிலையில் தற்போது மாம் பூக்கள் பூத்துக் குலுங்கி வரும் நிலையில் மழை மற்றும் பனிப்பொழிவினால் பூச்சி தாக்குதலால் மாம் பூக்கள் கருகி வருகிறது. இதற்கு பலமுறை மருந்துகள் அடித்தும் பூச்சிகள் கட்டுக்குள் வரவில்லை என்று மா விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். உடனடியாக வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும் என்று மா விவசாயிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story