ஜல்லிக்கட்டு பாதுகாப்பு: காவல் ஆணையர் ஆய்வு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குறித்து காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வருகின்ற தை முதல் நாள் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ளது ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது இந்நிலையில் நேற்று (ஜன.8) மாலை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம், காளைகள் மருத்துவ பரிசோதனை மையம், காளைகள் கொண்டு வரும் பாதை, வாடிவாசல் அமையும் இடம், ரோட்டின் இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். உடன் காவல் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் பலர் இருந்தனர்.
Next Story