ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் சாலை படுமோசம்

ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் சாலை படுமோசம்
தீவிரம்பத்தூர் சிட்கோ சாலை படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் வழியாக, வல்லம் வடகால் சிப்காட் செல்லும் பிரதான சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன. தொழிற்சாலைக்கு செல்லும் கனரக வாகனங்கள், தொழிலாளர்களை ஏற்றி செல்லும் தனியார் பேருந்து உட்பட ஏராளமான இருசக்கர வாகனங்கள் இச்சாலை வழியாக செல்கின்றன. இந்த சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. சிறு மழை பெய்தாலே, சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த சாைலயில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிர்பலி ஏற்படுவதற்கு முன் ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் சாலையை சீரமைக்க சிப்காட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சிப்காட் ெதாழிலாளர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
Next Story