வாலாஜாபாத் சாலை ஆக்கிரமிப்பு தினமும் அவதிப்படும் பாதசாரிகள்

வாலாஜாபாத் சாலை ஆக்கிரமிப்பு தினமும் அவதிப்படும் பாதசாரிகள்
வாலாஜாபாத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில், 20க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதை சுற்றி 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தினர், பல்வேறு தேவைகளுக்காக தினமும் வாலாஜாபாத் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வாலாஜாபாத் ராஜவீதி சாலையில் உள்ள பல்வேறு கடைகளுக்கு, காலை முதல் இரவு வரை ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இந்நிலையில், வாலாஜாபாத் ராஜவீதியில், சில வணிக நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளர்கள், தங்களது எல்லையை நீட்டித்து, விற்பனை செய்யும் பொருட்களை சாலையோரங்களில் வைத்து வியாபாரம் செய்கின்றனர். பழக்கடைகள், மளிகை கடைகள், துணிக்கடைகள் மற்றும் உணவகம், டீக்கடை என, அனைத்து கடைகளும் சாலையோரங்களை ஆக்கிரமித்துள்ளன. அதேபோல், சாலையோரங்களில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள், தள்ளுவண்டி கடைகள், பெட்டி கடைகள் போன்றவையும் சாலையோரங்களை ஆக்கிரமித்தே அமைக்கப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பாதசாரிகள் வாகன நெரிசலில் சிக்கி கடும் சிரமப்படுகின்றனர். எனவே, வாலாஜாபாதில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகை, வாகன பெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story