பரந்தூர் சுகாதார நிலையத்தை சூழ்ந்த மழைநீரால் கடும் அவதி
Kanchipuram King 24x7 |9 Jan 2025 2:49 AM GMT
சுகாதார நிலையத்தை சுற்றிலும் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் அடுத்த பரந்துார் கிராமத்தில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு, கர்ப்பிணியர் மற்றும் பகுதிவாசிகள் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.இந்த சுகாதார நிலையத்தின் முகப்பில் மட்டுமே சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனை வளாகத்தின் மற்ற மூன்று பக்கங்களிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. மேலும், பரந்துார் ஏரியையொட்டி சுகாதார நிலையம் இருப்பதால், மழைக்காலத்தில் வளாகம் முழுதும் மழைநீர் தேங்குகிறது. இந்த நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பிரசவிக்கும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சுகாதார நிலையத்தை சுற்றிலும் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story