சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
சாலபோகம் கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் இருந்து சாலபோகம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இச்சாலை வழியாக புத்தேரி, மேட்டு நகர், பாக்குபேட்டை, கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சாலையின் நடுவே மண் உள்வாங்கியுள்ளதால், பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையை முறையாக சீரமைக்காமல், சாலை பள்ளத்தில் செடியின் கிளையை போட்டு வைத்துள்ளனர். அகலம் குறைவான இச்சாலையில் செல்லும் கனரக வாகனங்களும், வளைவில் திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சாலபோகம் கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story