ஆரணி நகராட்சியில் சேவூர் ஊராட்சியை இணைக்க ஆரணி எம்எல்ஏ எதிர்ப்பு.
Arani King 24x7 |9 Jan 2025 2:54 AM GMT
ஆரணி நகராட்சியை விரிவாக்கம் செய்ய சேவூர் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை தலைமைச்செயலகத்தில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் மனு கொடுத்தார்
ஆரணி நகராட்சியை விரிவாக்கம் செய்ய சேவூர் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை தலைமைச்செயலகத்தில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் மனு கொடுத்தார். ஆரணி நகராட்சியை விரிவாக்கம் செய்ய சேவூர், பையூர், முள்ளிப்பட்டு, இராட்டிணமங்கலம், இரும்பேடு ஆகிய ஊராட்சிகளை இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரணி எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் அவரது சொந்த ஊரான சேவூர் ஊராட்சியை ஆரணி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தலைமைச் செயலர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சேவூர் ஊராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கினைப்பின்படி 11ஆயிரத்து81 பேர் வசிக்கின்றனர். சேவூர் வளர்ச்சி அடைந்த மிகப்பெரிய பஞ்சாயத்து என்பதால் ஏராளமான புதிய வீடுகள் கட்டப்படுகின்றன. 25க்கும் அதிகமான திருமண மண்டபங்கள், 25 மாடர்ன் ரைஸ் மில்கள், மேலும் எஸ்.எல்.எஸ்.மில்லில் கிட்டத்தட்ட 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 2ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் வசிக்கின்றனர் வரிவசூல் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் ஆரணி நகராட்சியுடன் சேவூர் பஞ்சாயத்து இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும். இதனால் பெண்களுக்கு கிடைத்து வந்த கூலித்தொகை வராது. அத்துடன் மக்களுக்கு தேவையான சுகாதாரம், மருத்துவ வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் ஆகியவை சீரான முறையில் கிடைக்காது. ஆரணி எம்எல்ஏ என்ற முறையில் எனது கருத்தை கேட்காமல் சேவூர் ஊராட்சியை ஆரணி நகராட்சியுடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே சேவூர் மக்கள் நலன் கருதி சேவூர் ஊராட்சியை ஆரணி நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்ததை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும். அவசியம் ஏற்பட்டால் சேவூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
Next Story