சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்
Nagercoil King 24x7 |9 Jan 2025 3:02 AM GMT
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் , அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்:- அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல், விதவை சான்றிதழ், முதிர்கன்னி ஓய்வூதியத்தொகை, ஆதரவற்றோர் விதவை சான்றிதழ், குடும்ப அட்டை, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதே ஆகும். என பேசினார். முன்னதாக பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story