சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
Madurai King 24x7 |9 Jan 2025 3:11 AM GMT
மதுரை சமயநல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செவல்பட்டியை சேர்ந்த மணிகண்டனின் மகன் விக்னேஷ் பாண்டி (22). சிவகங்கை மாவட்டம் தனியார் சட்டக் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவராவார். அதேபகுதி யுவராஜ் (19) என்பவர் ஸ்ரீவில்லிபுத்துார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு ஆண்டு படித்தார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (ஜன.7) இருசக்கர வாகனத்தில் கோவை சென்றனர். விக்னேஷ் பாண்டி ஓட்டினார். சமயநல்லுார் நான்குவழிச்சாலை ரயில்வே மேம்பால ஏற்றத்தில் சென்ற காய்கறி வேனின் பின்னால் இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று (ஜன.8) சிகிச்சை பலனின்றி யுவராஜ் உயிரிழந்தார். விக்னேஷ் பாண்டி தொடர் சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்து தொடர்பாக சமயநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story