குமரி :  தந்தை - மகன் விஷம் குடித்து தற்கொலை

குமரி :  தந்தை - மகன் விஷம் குடித்து தற்கொலை
சுசீந்திரம்
குமரி மாவட்டம்  சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவசுப்பிரமணிய பிள்ளை வயது 58, டெம்போ டிரைவர். இவரது மனைவி ஆறுமுகசெல்வி. மகன் சிவராஜன் வயது 21, கோணம் ஐடிஐ-யில் கம்ப்யூட்டர் படித்து வந்தான். ஆறுமுகசெல்வி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தீராத கழுத்து வலியால் அவதிப்பட்டு, விஷ மருந்து சாப்பிட்டு இறந்துவிட்டார்.      இதனால் மன உளைச்சலில் இருந்தவர் அடிக்கடி மனைவியே இறந்து விட்டாலே நாம் இனி இருப்பதைவிட சாவதே மேல் என புலம்பிக் கொண்டிருந்தவர். நேற்று காலை வீடு பூட்டப்பட்டு இருந்தது. பின்பக்க கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது இரண்டு பேர்களும் ஏதோ விஷமருந்தை சாப்பிட்டு நாற்காலியில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து காசி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார்  இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை  செய்து வருகின்றனர்.
Next Story