விழுப்புரத்தில் சிறுவர் பூங்காவில் டென்னிஸ் மைதானம் கலெக்டர் திறப்பு

X
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இங்கு, விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறும் வகையில், ரூ.24.5 லட்சம் மதிப்பீட்டில் 36 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலம் கொண்ட டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மைதானத்தை, நேற்று கலெக்டர் பழனி திறந்து வைத்தார். இதில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா, நகராட்சி உதவி பொறியாளர் ராபர்ட் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

