பறக்கும் படையினர் சோதனை

பறக்கும் படையினர் சோதனை
ஈரோடு கிழக்கு தொகுதியில் பறக்கும் படையினர் விடிய விடிய தீவிர வாகன சோதனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்காக மூன்று பறக்கும் படை, ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வை குழு ஆகவே உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளது. இது தவிர மூன்று நிலை கண்காணிப்பு குழு, ஒரு கணக்கு தணிக்கை குழு ஆகியவை வேட்பு மனு தாக்கல் செய்யும் 10-ந் தேதி முதல் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பறக்கும் படைக்குழுவில் எக்ஸிக்யூட்டிவ் மேஜிஸ்ட்ரேட் நிலை அதிகாரி ஒருவர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு போலீசார், ஒரு வீடியோ கிராபர் உள்ளனர். தலா 8 மணி நேரம் என 24 மணி நேரமும் பறக்கும் படையினர் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.வாகன சோதனைகள் முறையாக நடைபெறுகிறதா தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் சோதனை சாவடி,காளைமாட்டு சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதில்,முறையாக வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறதா, ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறதா, பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை காவலர்கள் சோதனை செய்வதை தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் உறுதி செய்தார். விடிய விடிய இந்த வாகன சோதனை நடைபெற்றது. வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது. இதை போல் ஈரோடு கிழக்கு தொகுதி மாவட்ட எல்லை பகுதியான கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று ஈரோடுக் குள் வரும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.வாகனங்களில் உள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.
Next Story